[X] Close
 

வாட்ஸ் அப்பில் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்: புதிய வசதி அறிமுகம்


whatsapp-group-admins-can-now-set-send-message-permissions-on-android-iphone

  • பாரதி
  • Posted: 30 Jun, 2018 15:28 pm
  • அ+ அ-

வாட்ஸ் அப் சமூகவலைதளத்தில் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குரூப் அட்மினாக இருப்பவர் அந்த குரூப்பில் யார் யார் தகவல் அனுப்ப முடியும் என்பதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

இதனால் முக்கியமான தகவல் பரிமாற்றத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு குரூப்பில் இஷ்டத்துக்கு ஒவ்வொருவரும் ஒரு தேவையற்ற தகவலைப் பகிர்ந்து முக்கியமான தகவல்களைப் பின்னுக்குத் தள்ளுவதை தவிர்க்கலாம்.

இந்த வசதியைப் பெற வாட்ஸ் அப் குரூப் செட்டிங்க்ஸ் மெனுவுக்குள் சென்ட் மெஸேஜ் என்று ஒரு ஆப்ஷன் இருக்கிறது. இந்த ஆப்ஷன் மூலம் யார் தகவல் அனுப்ப முடியும் என்பதை அட்மின் நிர்ணயிக்கலாம். இந்த புதிய சென்ட் மெஸேஜ் ஆப்ஷனில் எடிட் குரூப் இன்ஃபோவும் இருக்கும்.

ஆல் பார்டிசிபன்ட்ஸ், ஒன்லி அட்மின்ஸ் என்று இரண்டு ஆப்ஷன் இருக்கும். அதில் ஒன்லி அட்மின்ஸ் என்பதை செலக்ட் செய்தால் அவர்கள் மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும். அதே வேளையில் வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள ஆல் பார்ட்டிசபன்ட்ஸுக்கும் பிராட்காஸ்ட் மெஸேஜாக சென்றுவிடும்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close