[X] Close
 

கனவு காண எனக்கு உரிமை இருக்கிறது... பெண்களுக்காக ஒரு புதிய கீதம்


uns-new-anthem-a-powerful-ode-to-indian-women

  • பாரதி
  • Posted: 30 Jun, 2018 12:33 pm
  • அ+ அ-

ஐ.நா., சபையின் பெண்கள் மேம்பாட்டுக்கான இந்தியப் பிரிவு 'யுஎன் விமன் இந்தியா' புதியதொரு உத்வேகப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த இந்தியப் பெண்களைப் போற்றும் வகையிலும் மற்ற பெண்களை தடைகளைத் தாண்டி தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப முடிவெடுத்து வாழ வலியுறுத்தியும் இந்தப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் மாதுங்கா பகுதியில் நடைபெற்றது. இந்தப் பாடலை அர்கோ ப்ராவோ முகர்ஜி எழுதி இசையமைத்திருக்கிறார். நீதி மோகன் பாடலைப் பாடியுள்ளார்.

இந்தப் பாடல் வீடியோவில் பாடகி ஆஷா போன்ஸ்லே, நடிகை ஐஸ்வர்யா ராய், மூத்த நடிகை வஹீதா ரஹ்மான், ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா, டென்னிஸ் சாம்பியன் சானியா மிர்சா, கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், மல்யுத்த வீராங்கனை கீதா போகத், பாராலிம்பிக் சாம்பியன் தீபா மாலிக், மூன்றாம் பாலினத்தவரின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கவுரி சாவந்த் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

"கனவு காண, கனவை நோக்கி பயணிக்க, சாதிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. என்னை யாரும் தடுக்க முடியாது' என்பதுதான் இப்பாடலின் சாராம்சம். இப்பாடல் குறித்து கிக் பாக்ஸிங் சாம்பியனான காஷ்மீரைச் சேர்ந்த 10 வயது சிறுமி தஜாமுல், "இந்த உலகமே பெண்களுக்காக உருவாக்கப்பட்டது என் கிறார்கள். அப்படியென்றால் அவர்களை முன்னேற விடுங்கள். பெற்றோர் பெண் பிள்ளைகளுக்கு கூடுதல் ஆதரவு அளிக்க வேண்டும். பெண் குழந்தைகள் அவர்களது கனவை நோக்கி முன்னேற உதவ வேண்டும். அவர்களுக்குத் தேவையானதை விருப்பமானதை அவர்கள் தேர்வு செய்யும் உரிமையைத் தட்டி பறிக்கக் கூடாது. ஆண்களுக்கு பெண்களுக்கு குறைந்தவர்கள் என்ற எண்ணம் கூடாது" எனக் கூறியிருக்கிறார். இதுதான் இப்பாடலின் சாராம்சமும்கூட.

இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மிதாலி ராஜ், "ஆணாதிக்கம் நிறைந்த கிரிக்கெட் போன்ற விளையாட்டில் பெண்கள் சாதிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால், உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் நிலைமை மாறியிருக்கிறது. நிறைய பெண் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெண்கள் எப்போதும் சுய சார்புடையவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும். இது தன்னம்பிக்கையை அளிக்கும். ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கை ஏற்படும்போது உணர்வு ரீதியாகவும் அவள் மிகவும் வலுவானவளாக இருப்பாள்" எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close