[X] Close

மக்களவையில் செயல்பாடு; எம்.பி.க்களை கண்டித்த சபாநாயகர் ஓம் பிர்லா


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:31 am
  • அ+ அ-

-,

மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் செயல்பாடுகளை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டித்தார்.

ஓம் பிர்லா கூறியதாவது: சில உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளின்போது சக எம்.பி.க்களுடன் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் பேசிக் கொண்டிருக்கும் போக்கை பார்க்கிறேன்.

இது உங்களுடைய அவை. இந்த முறையில்தான் அவையை நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் என்னால் நடத்த முடியும். ஆனால், அது சரியா? இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. அவை நடவடிக்கைகளின்போது உறுப்பினர்கள் அனாவசியமாக பேசக் கூடாது. நீங்கள் தனியாக பேச வேண்டும் என்று விரும்பினால், அவைக்கு வெளியே சென்று பேசுங்கள்’ என்றார். அவரது கருத்தை பெரும்பாலான எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close