[X] Close

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் திரிணமூல் கோரிக்கை


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:21 am
  • அ+ அ-

-,

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது திரிணமூல் உறுப்பினர் அகமது ஹாசன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க கோரி பேசியதாவது:பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் துன்புறுத்தப்படும் மற்ற சிறுபான்மையிருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மசோதாவை மத்திய அரசு முன்மொழிகிறது. அதை இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அதே அடிப்படையில் இலங்கையில் துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அல்லது இலங்கைக்கு அவர்களை அனுப்பி அவர்களது மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அகமது ஹாசன் பேசினார். அதிமுக உறுப்பினர் கே.ஆர். அர்ஜூனன் பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டு, அந்த தொழிற்சாலை இருந்த நிலம் இப்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த நிலத்தில் மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும் அமைக்க வேண்டும்’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close