[X] Close

பழைய இரும்பு கடைக்கு விற்பனைக்கு வந்த ராணுவ துப்பாக்கி: குண்டு பாய்ந்து இருவர் பலி


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 12:15 pm
  • அ+ அ-

-பிடிஐ

மகாராஷ்டிராவில் பழைய இரும்பு கடையில் விற்பனைக்கு வந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இன்று அதிகாலை 2 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் பி.எஸ். டாடாலே பிடிஐயிடம் தெரிவித்ததாவது:

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் கரே கர்ஜூன் கிராமத்தில் பழைய இரும்பு கடையில் ஒன்று உள்ளது. இங்கு இன்று அதிகாலை விற்பனைக்கு வந்த பொருட்களிலிருந்து உலோகங்களைப் பிரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அவர்களிடம் விற்பனைக்கு வந்த ராணுவ துப்பாக்கி ஒன்றை எடுத்து அதிலிருந்து உலோகத்தை பிரித்தெடுக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அதில் ஏற்கெனவே இருந்த துப்பாக்கிக் குண்டு எதிர்பாராதவிதமாக வெடித்தது.

துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு கெய்க்வாட் வீட்டில் வெடித்தது. இதில் அக்‌ஷய் நவநாத் கெய்க்வாட் (19), சந்தீப் சாஹேப் தீரோட் (34) ஆகிய இரண்டு கிராமவாசிகள் கொல்லப்பட்டனர். 

இந்த சம்பவம் அதிகாலை 4 மணியளவில் மாவட்ட தலைமையகத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கரே கர்ஜூன் கிராமத்தில் நடந்தது. 

துப்பாக்கியிலிருந்து வெடித்த குண்டுவெடிப்பின் தாக்கம் மிகவும் கடுமையானது, பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துண்டுதுண்டாக சிதறி விழுந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு காவல் உதவி ஆய்வாளர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close