[X] Close

மனித கழிவுகளை அகற்றும்போது உயிரிழப்பு: தமிழகம் முதலிடம் என்பது வெட்கக்கேடு: சிதம்பரம் கடும் சாடல்


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 11:11 am
  • அ+ அ-

மனித கழிவுகளை அகற்றும்போது உயிரிழந்தவர்கள் அதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வெட்கக்கேடானது என முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

மனித கழிவுகளை அகற்றும் போது 1993-ம் ஆண்டு முதல் 15 மாநிலங்களில் மொத்தம் 620 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவங்கள் வெளியாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 144 பேரும், குஜராத்தில் 131 பேரும் கர்நாடகாவில் 75 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு! மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன்’’ எனக் கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close