[X] Close

கிருமி நாசினி, போன்லெஸ் சிக்கன்.. ஜூலை 15 முதல் ரயில்களில் அதிரடி மாற்றம்


from-boneless-chicken-to-hand-sanitisers

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Jun, 2018 11:11 am
  • அ+ அ-

ரயில்களில் வழங்கப்படும் உணவு மனிதர்கள் உண்ணத் தகுதியற்றதாக இருக்கிறது என தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கருத்து தெரிவித்தார். அதன் பின்னர் ரயில்வே துறை, உணவு தயாரிப்பில் தரத்தை மேம்படுத்த கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ரயில்வே அடுக்களைகளில் சமையல் தயாரிப்பு முறையை லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணித்தல் போன்ற பல திட்டங்கள் அமலுக்குக் கொண்டுவரப்பட்டன.

அந்த வரிசையில் தற்போது ஜூலை 15 முதல் 11 ராஜ்தானி ரயில்களிலும் 14 துரந்தோ ரயில்களிலும் வழங்கப்படும் உணவு பதார்த்தங்களில் சில மாற்றம் செய்யப்படுகிறது. இந்த குறிப்பிட்ட ரயில்களில் காலை உணவுடன் சாக்கலேட் பாரும் மதியம் மற்றும் இரவு உணவுடன் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளும் வழங்கப்படும். அசைவ உணவு தேர்வு செய்பவர்களுக்கு இனி போன்லெஸ் சிக்கன் வழங்கப்படும். இதுவரை நான் வெஜ் பிரியர்களுக்கு எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள்தான் வழங்கப்பட்டு வருகின்றன. உணவுகளை பயோ டீகிரேடபிள் தட்டுகளில் வைத்து ஏர்டைட் மூடி போட்ட மூடவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

இதுதவிர பயணிகளுக்கு ஹாண்ட் சானிட்டைசர் (கிருமி நாசினி) வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் உணவைக் கொண்டுவர ட்ராலிகள் பயன்படுத்தப்படும். உணவு வழங்கும் ஊழியர்களுக்கான சீருடையை மாற்றுவதோடு பயணிகளுடன் கனிவாகப் பேசிப்பழக பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close