[X] Close

17 சதவீத நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்


17

  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 10:14 am
  • அ+ அ-

நாட்டில் உள்ள 17 சதவீத நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 255மாவட்டங்கள் மற்றும் 1,597 வட்டங்களில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக, புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அந்த வகையில், தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நகரங்களின் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் உள்ள 17 சதவீத நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவது தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 4,378-ல் 756 நகரங்கள் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. இந்தப் பட்டியலில் 184 நகரங்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் (111), உத்தரபிரதேசம் (84) ஆகியவை முறையே 2, 3-ம் இடங்களைப் பிடித்துள்ளன. அதேநேரம், டெல்லியின் 4 மாநகர பகுதிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சிறிய மாநிலங்களான பஞ்சாபின் 50 சதவீத நகரங்கள் (82) மற்றும் ஹரியாணாவின் 60 சதவீத நகரங்களிலும் (52) தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.

தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஊரக பகுதிகளில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட மத்திய குழுவினர் தங்களது பணியை தொடங்கி உள்ளனர். ஆனால், நகர்ப்புற பகுதிகளில் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பணிகளை கவனிக்குமாறு மாநில, நகராட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 1 முதல் செப்டம்பர் 15 மற்றும் அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 என 2 கட்டமாக இந்தப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close