[X] Close

செய்தித்தாள் காகிதம் மீதான 10% இறக்குமதி வரியை வாபஸ் பெற வேண்டும்: இந்திய பத்திரிகைகள் சங்கம் கோரிக்கை


10

  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 10:04 am
  • அ+ அ-

இந்திய பத்திரிகைகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:மத்திய பட்ஜெட்டில் பத்திரிகைகள் அச்சடிப்பதற்கான செய்தித்தாள் காகிதம் மீது 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி பத்திரிகை மற்றும் பருவ இதழ் வெளியீட்டாளர்கள் ஏற்கெனவே குறைவான விளம்பர வருவாய், அதிக செலவுகள், இணையதளத்தால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். சிறிய மற்றும் நடுத்தர செய்திப் பத்திரிகைகள் கடும் நஷ்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு செய்தித்தாள் காகிதத்தின் மொத்த கொள்முதல் 2.5 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு மில்லியன் டன் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இலகு ரக காகிதங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. எனவே மத்திய அரசு இதில் அவசரமாக தலையிட்டு தாங்கமுடியாத சுமையை ஏற்படுத்தி உள்ள 10 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்து இந்திய செய்தி பத்திரிகை தொழிலை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close