[X] Close

கர்நாடக அரசியல் குழப்பம் குறித்த விவகாரம்: காங். அமளியால் மாநிலங்களவை முடக்கம்


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 09:58 am
  • அ+ அ-

-பி.டி.ஐ,

கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங் களவை நேற்று நாள் முழுவதும் முடங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று காலையில் வெங்கய்ய நாயுடு தலைமையில் மாநிலங்களவை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை யின் மையப்பகுதிக்குச் சென்று கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து பிரச்சினை எழுப்பினர். காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசை கவிழ்க்க பாஜகவினர் சதி செய்வதாக குற்றம்சாட்டிய அவர்கள் இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதனிடையே, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக் கும் முயற்சியைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் உறுப் பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமையில் அவை மீண்டும் கூடியது. அப்போதும் காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரம் நடத்த வேண்டியிருப்பதால் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையை உறுப்பினர்கள் ஏற்காததால், அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, பூஜ்ய நேரத்தின் போது, அவை விதி 267-ன் கீழ் அனைத்து அலுவல்களையும் ரத்து செய்துவிட்டு கர்நாடக விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர் பி.கே.ஹரி பிரசாத் நோட்டீஸ் வழங்கி இருப்பதாக வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க முடியாது என நாயுடு தெரிவித்ததால் காங்கிரஸார் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அமளி

பின்னர் 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. பட்ஜெட் குறித்து விவாதிக்க வேண்டியிருப்பதால் அனைவரும் அமைதியாக இருக்கையில் அமருமாறு ஹரிவன்ஷ் கோரிக்கை வைத்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், எந்த அலுவலும் நடைபெறாமல் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close