[X] Close

ஆயுதக் கடத்தல், ஊழல் வழக்குகள் தொடர்பாக 19 மாநிலங்களில் 110 இடங்களில் சிபிஐ சோதனை


19-110

  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 09:18 am
  • அ+ அ-

நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு களை விசாரித்து வருகிறது. புகார் களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்படும் நபர்களின் இடங்களில் சோதனை நடத்தி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிபிஐ நேற்று அதிரடி சோதனையை தொடங்கியது. நேற்று காலை 19 மாநிலங்களில் 110 இடங்களில், சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுவாகச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

டெல்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், புனே, ஜெய்ப்பூர், கோவா, ராய்ப்பூர், ஹைதராபாத், மதுரை, கொல்கத்தா, ரூர்கேலா, ராஞ்சி, பொகாரோ, லக்னோ, கான்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், ஒடிசா, இமாச்சலபிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரா, கர்நாடகா, பிஹார் ஆகிய மாநிலங் களின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெற்றது.

ஊழல், ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புதிய வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சிபிஐ சோதனை முடிந்த பிறகுதான், வழக்குகள் தொடர்பான முழு விவரங்களும் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

லக்னோவில் 11 இடங்கள்

இந்த சோதனையின்போது உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் மட்டும் 11 இடங்களில் சோதனை நடைபெற்றது.

உத்தரபிரதேச மாநில முதல்வராக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இருந்தபோது அரசு சர்க்கரை ஆலைகளில் அரசு பங்குகளின் விற்பனையில் நடந்த முறைகேடு குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாகவும் நேற்று லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை நடத்தினர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் நேத்ராம், வினய் பிரியா துனே, முன்னாள் மேலவை உறுப்பினர் இக்பால் சிங்கின் மகன்கள் வாஜித் அலி, முகமது ஜாவித் ஆகியோரது வீடு களிலும் சோதனை நடைபெற்றது.

ஐஏஎஸ் அதிகாரி நேத்ராம், முதல்வராக மாயாவதி இருந்த போது அவரது செயலராக பணி யாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

சர்க்கரை ஆலைகளில் பங்கு விற்பனை தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இதுவரை 5 முதன்மை விசாரணைகள் நடை பெற்று முடிந்துள்ளன.

கான்பூர்

மேலும் கான்பூரிலுள்ள பிரிட்டி்ஷ் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (பிஐசிஎல்) நிறு வனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கே.ஏ.துக்காளின் வீடு, அந்த நிறுவனத்தின் நிறுவனச் செயலர் கே.வி.பாஜ்பாய் வீடுகளி லும் சோதனை நடைபெற்றது. பிஐசிஎல் நிறுவனத்துக்குச் சொந்த மான நிலத்தை விற்பனை செய்ததில் முறைகேடு நடந்துள்ள தாக வழக்குப் பதிவானதையடுத்து அங்கு சோதனை நடைபெற் றுள்ளது. இந்த சோதனைகளின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

நாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. இதுபோல் வங்கி மோசடி தொடர்பாக சுமார் 50 இடங்களில் கடந்த 2-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. - பிடிஐஊழல், ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புதிய வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close