[X] Close

ஐஎம்ஏ நிதி நிறுவனத்திடம் ரூ.1.5 கோடி லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு மாவட்ட ஆட்சியர் கைது


1-5

  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 08:25 am
  • அ+ அ-

-இரா.வினோத்

பெங்களூருவை சேர்ந்த ஐஎம்ஏ நகைக் கடை அதிக வட்டி தருவதாக கூறி 42 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதன் உரிமையாளர் முகமது மன்சூர் கான் வெளிநாட்டுக்கு தப்பியோடியது தெரியவந்தது.

இந்நிலையில் முகமது மன்சூர் கான் வெளியிட்ட வீடியோவில், “சிவாஜிநகர் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்கிற்கு ரூ. 500 கோடி கொடுத்துள்ளேன். மற்றொரு எம்எல்ஏ ஜமீர் அகமது கானிடம் ரூ. 209 கோடி நிலம் வாங்கினேன். இதுதவிர வேறு சில அரசியல் பிரமுகர்களுக்கும் பணம் கொடுத்துள்ளேன். எனது நிறுவனத்தின் முதலீட்டைக் கொண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் பல கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியுள்ளேன்” என்று குறிப்பிட்டார். இதனை ரோஷன், ஜமீர் அகமது கான் உள்ளிட்டோர் மறுத்தனர்.

இந்நிலையில் பெங்களூரு மாவட்ட ஆட்சியர் விஜயசங்கரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஐஎம்ஏ நிதி நிறுவனத்துக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அளிப்பதற்காக அவர் ரூ.1.5 கோடி லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து விஜயசங்கரை கைது செய்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close