[X] Close

கிராமியப் பாடகிக்கு பிரதமர் மோடி புகழாரம்


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 08:20 am
  • அ+ அ-

குஜராத் கிராமியப் பாடகி கீதா ரபாரிக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

குஜராத்தை சேர்ந்த கீதா ரபாரி கிராமியப் பாடல்கள் பாடுவதில் புகழ்பெற்றவர். இவர் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமரைப் பாராட்டி தான் எழுதி வைத்திருந்த கிராமப்புற பாடலையும் அவர் பிரதமர் முன்பு பாடிக் காட்டினார். அந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களிலும், இணையதளத்திலும் வைரலாகி வருகிறது.

கீதா ரபாரியைப் பாராட்டி பிரதமர் மோடி ட்விட்டரிலும் கருத்து பதிவு செய்துள்ளார். அவர் கூறும்போது, “கீதா ரபாரியைப் போன்ற இளம் கிராமியப் பாடகிகள், குஜராத் மக்களுக்கு உலக அளவில் பெருமை சேர்த்துள்ளனர். அவர் சிறுமியாக இருந்தபோது அவர் பாடியப் பாடலைக் கேட்டு நான் உற்சாகமடைந்தேன். இன்று அவரைச் சந்தித்துப் பேசுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அவருடைய அனுபவங்களைக் கேட்பதும், தெரிந்துகொள்வதும் உன்னதமானது. கீதா ரபாரியைப் போன்றவர்கள் நமது சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். ஏழ்மைப் பின்னணியில் இருந்து வந்த கீதா, தற்போது பாடல் பாடுவதை உயிராகக் கொண்டு அதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். அவருடைய முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.

பிரதமரைச் சந்தித்தது குறித்து கீதா ரபாரி கூறும்போது, “பிரதமர் மோடியைச் சந்தித்ததை மறக்கவே முடியாது. நான் சிறுமியாக இருந்தபோது பள்ளியில் பாடினேன். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மோடி எனக்கு ரூ.250 வெகுமதி கொடுத்து, தொடர்ந்து பாடுமாறு உற்சாகப்படுத்தினார். நாங்கள் மல்தாரி வகுப்பைச் சேர்ந்தவர்கள். வனப்பகுதிகளில் வசிப்பவர்கள். பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய தபால் கார்டு அப்போது எனது தந்தைக்கு வந்தது. அதன்மூலம் நான் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். இப்போது கிராமப்புற பாடல்கள் பாடுவதில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளேன்” என்றார். - பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close