[X] Close

டெல்லி பேருந்து விபத்தில் சிக்கிய கணவர், குழந்தை இறந்தது தெரியாமல் தவிக்கும் உத்தரப்பிரதேச இளம்பெண்


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 08:24 am
  • அ+ அ-

ஆக்ரா அருகே உள்ள யமுனா விரைவுச் சாலையில் அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இந்த கோர விபத்தில், அப்பேருந்தில் பயணித்த 29 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த பானு பிரதாப்பும், அவரது ஒன்றரை வயது குழந்தையான ரியாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில், படுகாயமடைந்துள்ள அவரது மனைவி சுனிதா (25), தனது கணவரும், ஒன்றரை வயது கைக் குழந்தையும் இறந்தது அறியாமல் பரிதவித்து வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரிடமும் தனது கணவர் மற்றும் குழந்தை என்ன ஆனார்கள் என விசாரிக்கிறார்.

ஏற்கனவே படுகாயமடைந்திருக்கும் சுனிதாவிடம் உண்மையை கூறினால், அவரது நிலைமை இன்னும் மோசமாகக் கூடும் என்பதால் அவர்களும் பல்வேறு பதில்களை கூறி மழுப்பி வருகின்றனர்.

வேறு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர்களின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும் மருத்துவர்களும், செவிலியர்களும் சுனிதாவிடம் கூறியுள்ளனர்.

ஆனால், அவர்கள் தன்னிடம் எதையோ மறைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்ட சுனிதா, தமக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும், உணவு உண்ணவும் மறுத்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

கணவரும், கைக் குழந்தையும் இறந்தது தெரியாமல் இளம்பெண் அடைந்து வரும் வேதனையை கண்டு, மருத்துவமனையில் உள்ள அனைவரும் கண்கலங்குகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close