[X] Close

காங்., செய்தி தொடர்பாளர் வேலைக்கு தகுதித் தேர்வு


test-interview-for-congress-spokesperson-job-in-up-some-called-it-tough

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Jun, 2018 17:41 pm
  • அ+ அ-

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பணிக்கு தகுதித் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக சிலர் கருத்தும் தெரிவித்திருக்கின்றனர்.

குஜராத் மற்றும் காங்கிரஸ் மாநிலங்களில் அண்மையில் தேர்வு நடத்தி செய்தித் தொடர்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதே பாணியில் தற்போது உத்தரப் பிரதேசத்தில் செய்தித் தொடர்பாளர் பணிக்கு தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வில் 14 கேள்விகள் கேட்கப்பட்டன. மாவட்டங்கள், மண்டலங்கள், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி, முந்தைய தேர்தலில் பிடித்த இடங்கள் ஆகியன குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

அதேபோல் பாஜகவின் பிரதான தோல்விகள் என்னென்ன என்றும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இத்தேர்வு குறித்து தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறும்போது, "ஒரு மாநிலத்தின் செய்தித் தொடர்பாளராக இருக்க வேண்டும் என்றால் மாநிலம் குறித்த அடிப்படைத் தகவல்கள் தெரியவேண்டாமா? அதை கணிப்பதற்கு இதுதான் சரியான முறை. இத்தேர்வில் வெல்பவர்கள்தான் கட்சியின் முகங்களாக இருப்பர்" என்றார்.
2019 மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இப்படி கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close