[X] Close

காந்தி பிறந்த நாளில் பாத யாத்திரை: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 12:27 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அனைத்து பாஜக எம்.பி.க்களும் தங்கள் தொகுதியில் 150 கி.மீ. தொலைவை நிறைவு செய்யும் வகையில் பாத யாத்திரை செல்ல வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள நூலக வளாக அரங்கில் பாஜக எம்.பி.க்களின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று நடந்து வருகிறது.

பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும், பாஜகவின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கும், மற்ற எம்.பி.க்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை மோடி வழங்கினார்.

bjp.jpg 

அது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், " பாஜகவின், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு தங்கள் தொகுதியில் அக்டோபர் 2 முதல் 31-ம் தேதிக்குள் குறைந்தபட்சம் 150 கி.மீ . தொலைவு  பாத யாத்திரை செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

தங்கள் தொகுதியில் பாஜக எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறதோ அங்கெல்லாம் பாஜக எம்.பி.க்கள் சென்று வலுப்படுத்த வேண்டும் என்று  பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

எம்.பி.க்கள் பாத யாத்திரை செல்லும்போது, கிராமங்கள் எழுச்சியை நோக்கி இருத்தல் வேண்டும். ஜூரோ பட்ஜெட் விவசாயம், தோட்ட விவசாயத்தை ஊக்கப்படுத்துதல், சுயமாக முன்னேறுதல் ஆகியவற்றை மக்களிடம் வலியுறுத்த வேண்டும்

முதல் முறையாக பட்ஜெட்டை வெற்றிகரமாகத் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் நாம் தெரிவித்துள்ளோமோ, அவை அனைத்தும் நம்முடைய திட்டங்களில், செயல்பாடுகளில் தென்படவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்" எனத் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close