[X] Close
 

ராணுவ வீரர்களுக்கு கட்டிங், ஷேவிங் இலவசம்: வித்தியாசமான சலூன்கடை


this-man-from-buldhana-offers-free-shaving-services-to-soldiers

  • பாரதி
  • Posted: 29 Jun, 2018 16:46 pm
  • அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு இலவசமாக முடிவெட்டி மற்றும் முகச்சவரம் செய்கிறார்.

புல்தானா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தவ் கடேகர். இவர் அந்த ஊரில் சலூன் கடை நடத்தி வருகிறார். தனது கடைக்கு வருபவர்கள் யாரேனும் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் என்றால் அவர்களுக்கு இலவசமாகவே முடிதிருத்தம் செய்கிறார். முகச்சவரத்துக்கும் பணம் வாங்குவதில்லை. அதுமட்டுமல்லாது ராணுவ வீரர்களுக்கு மட்டும் வெள்ளியில் செய்த ரேசரைக் கொண்டு சவரம் செய்கிறார். இந்த ரேசரின் விலை ரூ.15,000.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "எனக்கு சொந்தமாக சிறிய சலூன் கடை இருக்கிறது. ராணுவத்தினர் நமக்காக எல்லையில் காவல் புரிந்து சேவை செய்கின்றனர். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த விரும்புகிறேன். அதற்காகத்தான் ராணுவ வீரர்களுக்கு இலவசமாக முடிதிருத்துகிறேன்" என்றார். இவர்களைத் தவிர பார்வையற்றோர் மட்டும் வீடற்றவர்களுக்கும் அவர் இலவசமாக சவரம் செய்கிறார்.

கடேகரின் சலூன் கடைக்கு பக்வான் காளி வாடிக்கையாளர். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான காளி எப்போதெல்லாம் புல்தானாவுக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் கடேகர் கடையில் முடி திருத்தம் செய்து கொள்கிறார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close