[X] Close
 

இப்படியுமா டிக்கெட் பரிசோதனை செய்வாங்க!?


commando-style-tactics-to-nab-ticketless-travellers

  • பாரதி
  • Posted: 29 Jun, 2018 16:05 pm
  • அ+ அ-

நீங்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது, திடீரென வெடிச் சத்தம் கேட்கிறது. ரயில் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்துகிறார். இதெல்லாம் நடந்தால் நிச்சயம் அது ஏதோ நக்சல் சதியாகவோ அல்லது ரயில் கொள்ளையர்கள் கைவரிசையாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை சாதாரண டிக்கெட் செக்கிங்குக்காகக்கூட இருக்கலாம்.

நம்பமுடியவில்லை என்றாலும்கூட இதுதான் உண்மை. தெற்கு மத்திய ரயில்வே வாரியம் (South Central Railway) தான் இப்படி ஒரு யோசனையை அமல்படுத்தியிருக்கிறது. 

ஒரு குழுவாக செல்லும் டிக்கெட் பரிசோதகர்கள் இரண்டு ரயில் நிலையங்களுக்கு நடுவழியில் ஓரிடத்தில் மறைந்து கொள்கின்றனர். அவ்வழியாக வரும் ரயில்களைத் தடுத்து நிறுத்துகின்றனர். சிறிய ரக வெடியை வைத்து ரயிலை நிறுத்தச் செய்கின்றனர். இதற்கு ‘mid-section ambush check’  நடு வழியில் பதுங்கியிருந்து சோதனை நடத்துதல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இதுதவிர ‘Incognito checks’  அதாங்க மாறுவேடத்தில் வந்து பரிசோதனை செய்வதும் நடக்கிறது. பயணிகளோடு பயணிகளாகக் கலந்திருக்கும் அந்த டிக்கெட் பரிசோதகர்கள் திடீரென எழுந்து டிக்கெட் பரிசோதனை செய்ய ஆரம்பிக்கின்றனர். 

அப்புறம் ‘bus raids’ பஸ் ரெய்டு என்று ஒன்றும் இருக்கிறது. தனியார் பேருந்துகள் மூலம் டிக்கெட் பரிசோதகர்கள் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு ரயிலில் ஏறும் பரிசோதகர்கள் அதிரடியாக டிக்கெட் பரிசோதனையில் ஈடுபடுகின்றனர்.

பின்னர், டிக்கெட் எடுக்காதவர்களை அதே பேருந்தில் ஏற்றிச் சென்றும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றனர்.
4-வதாக ஒரு வகை சோதனை இருக்கிறது. அதற்குப் பெயர் ‘Fortress cheks’ ஃபோர்ட்ரஸ் செக்ஸ். ரயில் நிலையங்களில் உள்ள இரண்டு வாயில்களிலும் டிக்கெட் பரிசோதகர்கள் நிற்பர். ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் டிக்கெட் இல்லையென்றால் சிக்குவது நிச்சயம்.

இப்படி பல புதுமையான வழிகளில் டிக்கெட் பரிசோதனை செய்த வகையில் கடந்த 11 மாதங்களில் 28,534 பயணிகள் பிடிபட்டுள்ளனர். ரூ.1.47 கோடி அபராதத் தொகை வசூலாகியுள்ளது.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close