[X] Close

2 நாட்களில் 10 லட்சம் டவுன்லோடுகள்: சுஷ்மா பெருமிதம்!


1-million-downloads-in-two-days

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Jun, 2018 15:16 pm
  • அ+ அ-

இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் இருந்தும், புதிய பாஸ்போர்ட்டை எளிய முறையில் பெறும் வகையில், பாஸ்போர்ட் சேவா என்ற மொபைல் செயலியை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.

இந்நிலையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டு இரண்டே நாட்களில் 10 லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டரில், வெளியுறவு அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்த பாஸ்போர்ட் சேவா மொபைல் அப்ளிகேஷனை இரண்டு நாட்களில் 10 லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இந்த செயலி பாஸ்போர்ட் புரட்சி என்று சொல்லும் அளவுக்கு இருக்கும் என்று சுஷ்மா கூறியிருந்தார். தற்போது 2 நாட்களில் 10 லட்சம் பேர் டவுன்லோட் செய்திருப்பதால் அவர் பெருமிதத்துடன் ட்வீட் செய்திருக்கிறார்.

செயலியின் அம்சங்கள்:

1.மொபைல் ஆப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சப்மிட் செய்தாலே பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

2.செயலியை பயன்படுத்தி நாட்டின் எந்த பகுதியிலும் இருந்தாலும், இருக்கும் இடத்தில் இருந்தே கைபேசி மூலம் பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க முடியும்.

3.வாடிக்கையாளர்  குறிப்பிடும் முகவரியில் காவல்துறையின் சரிபார்ப்பு முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் அனுப்பிவைக்கப்படும்.

4.திருமணமான பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திருமண சான்றிதழ் தேவையில்லை.

5.விவாகரத்து பெற்ற பெண்கள் முன்னாள் கணவர் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை.

இப்படிப்பட்ட சலுகைகளுக்காகவே இந்த செயலிக்கு நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close