[X] Close

ராஜினாமாவைத் திரும்பப் பெறமாட்டோம்: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 08:51 am
  • அ+ அ-

-,

ராஜினாமாவை நாங்கள் திரும்பப் பெற மாட்டோம் என்று கர்நாடகா காங்கிரஸைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு 15 காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் கூட்டணி ஆட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்தவுடன் அவர்கள் தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் பாஜகவின் பின்னணி உள்ளது என்று காங்கிரஸார் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள சாபிடெல் நட்சத்திர ஓட்டலில் 10 எம்எல்ஏக்களும், மற்ற எம்எல்ஏக்கள் ஷிர்டியிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா அரசியல் விவகாரம் குறித்து மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் கூறும்போது, “நாங்கள் 15 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளோம். வரும் செவ்வாய்க்கிழமை (இன்று) பேரவை காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம்.

நாங்கள் எங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே மும்பை வந்துள்ளோம். ராஜினாமாவை வாபஸ் பெறும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

மும்பை பாந்த்ரா-குர்லா வளாகத்தில்தான் சாபிடெல் சொகுசு ஓட்டல் அமைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இந்த ஓட்டலில்தான் கர்நாடகா எம்எல்ஏக்கள் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பாஜக தலைவர் மவுனம்எம்எல்ஏக்கள் 15 பேரையும் தங்கவைத்து அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் பிரசாத் லாட், மோஹித் கம்போஜ் ஆகியோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் இதுகுறித்துப் பேச பிரசாத் லாட் மறுத்துவிட்டார்.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் சவாண் கூறும்போது, “மகாராஷ்டிராவை ஆளும் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் இணைந்து கர்நாடகா அரசை கவிழ்க்க முயல்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close