[X] Close

ஜூபிடர் கேபிடல் விமான உரிமையாளர் பாஜக எம்.பி. ராஜீவ் மறுப்பு


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 08:49 am
  • அ+ அ-

-,

கர்நாடகாவில் நடைபெற்று வரும் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அதிருப்தியுற்ற காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்தனர்.

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மும்பையிலுள்ள சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மும்பைக்கு பாஜக எம்பியும், ஜூபிடர் கேபிடல் நிறுவன தலைவருமான ராஜீவ் சந்திரசேகருக்குச் சொந்தமான விமானத்தில் சென்றுள்ளனர்.

இதனால் இந்த விவகாரத்தில் பாஜகவின் பின்னணி உள்ளது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு பதிலளித்து எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:

நான் பாஜக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறேன். ஆனால் மும்பைக்கு அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்கள் நிறுவன சிறப்பு விமானத்தில் சென்றதற்கும், எனக்கும் சம்பந்தமில்லை. இதற்காக என் மீதும், என் விமான நிறுவனம் மீதும் குறை கூற வேண்டாம். கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர் பரமேஸ்வர் அவர்களே... எங்கள் விமான நிறுவனம், வர்த்தகப் பயன்பாட்டுக்கு இயங்கி வருவதாகும். அதை அரசியல்வாதிகள் பலர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். உங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த தலைவர்களும் முன்பு எங்கள் விமானத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close