[X] Close

மும்பையில் 3 மணி நேரத்தில் 108 மி.மீட்டர் கன மழை


3-108

  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 07:45 am
  • அ+ அ-

-,

மும்பையில் நேற்று காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையிலான 3 மணி நேரத்தில் 108.2 மிமீ மழை பெய்தது.

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 30 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இந்நிலையில், காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையிலான 3 மணி நேரத்தில் 108.2 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது.

சாந்தாகுரூஸ் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, மரோல் (121 மி.மீ), குர்லா (120 மி.மீ), விக்ரோலி (114 மி.மீ), விலே பார்லே (100 மி.மீ) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நேரத்தில் கனமழை பெய்தது. கனமழையால் மும்பையில் நேற்று விமான சேவை மற்றும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பல்வேறு விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மும்பையில் கோவண்டி என்ற இடத்தில் நேற்று அதிகாலையில் ஒரு கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு அந்தேரி தொழிற்பேட்டையிலும் நேற்று சுவர் இடிந்து விழுந்த சம்பவம் நடந்தது. என்றாலும் இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் நேற்று பகல் 12.51 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் மும்பை மற்றும் அதையொட்டிய கொங்கன் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close