[X] Close

பாஜகவில் சேர்ந்ததால் வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர்: உ.பி. பெண் புகார்


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 11:57 am
  • அ+ அ-

பாஜகவில் சேர்ந்ததால் வீட்டை காலி செய்ய உரிமையாளர் நிர்பந்தம் செய்வதாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த  பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் பாஜகவில் ஏராளமான பெண்கள் இணைந்தார்.

அப்போது அலிகார் நகரில் வசித்து வரும் குலிஸ்தானா என்ற இஸ்லாமிய பெண்மணியும் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். பாஜக தலைவர்கள் முன்னிலையில் மற்ற பெண்களுடன் சேர்ந்து பாஜக உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார்.  

அவர் ஊர் திரும்பியதும் அவர் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் அவரிடம் கோபித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பாஜகவில் சேர்ந்ததால் அவருக்கு வாடகை வீடு வழங்க முடியாது என கூறியதாக தெரிகிறது. வீட்டை அவர் உடனடியாக காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.அவர் குலிஸ்தானாவிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.

women.JPG 

இதனால் குலிஸ்தானா அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து குலிஸ்தானா கூறுகையில் ‘‘பாஜகவில் சேர்ந்தால் எனது வீட்டின் உரிமையாளர் காலி செய்ய சொல்கிறார். கட்சியில் சேர்ந்தது எனது தனிப்பட்ட விஷயம். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை’’ எனக் கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close