[X] Close

பாரதிய ஜனதாவில் இணைந்தார் தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ்


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:31 am
  • அ+ அ-

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றவரும், அர்ஜுனா விருது பெற்றவருமான தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் மற்றும் இந்தி பாடகியும், நடனக் கலைஞருமான சப்னா சவுத்ரி ஆகியோர் பாஜகவில் நேற்று இணைந்தனர்.

நாடு முழுவதும் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கையின்போது, தடகள வீராங்கனையான அஞ்சு ஜார்ஜ் அக்கட்சியில் முறைப்படி இணைந்தார். கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா, அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அஞ்சு ஜார்ஜ், பாரீசில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார். இதன் மூலம், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. அதன் பின்னர், 2004-ம் ஆண்டு நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா சார்பில் அவர் பங்கேற்று சிறப்பிடம் பிடித்தார்.

அவரது விளையாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது.

பாடகி சப்னா சவுத்ரி

 இதேபோல், டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில், இந்தி பாடகியும், நடனக் கலைஞருமான சப்னா சவுத்ரி கலந்துகொண்டு கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close