[X] Close

திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்: அடுத்த மாதம் மத்திய அரசு அறிமுகம்


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:29 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பத்தை அடுத்த மாதம் மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.

இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:இந்தியாவுக்குள் செல்போன்கள் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ, அவற்றைக் கண்டுபிக்க உதவும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. செல்போன்களில் இருந்து சிம் கார்டை எடுத்தாலும், ஐஎம்இஐஎண்ணை மாற்றினாலும் கூட, அவற்றை கண்டுபிடிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க, ‘சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் டெலிமேட்டிக்ஸ்’ துறையிடம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி புதிய தொழில்நுட்பத்தை ‘சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் டெலிமேட்டிக்ஸ்’ தயாரித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு இந்தத்தொழில்நுட்பத்தை வெளியிடுவதற்காக மத்திய அமைச்சரை தொலைத்தொடர்பு துறை அமைச்சக அதிகாரிகள் கேட்டுக் கொள்ளும். எனவே, இத்தொழில்நுட்பம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும்.

இந்தியாவில் இதற்காக ‘சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடென்டிடி ரெஜிஸ்ட்ரர்’ (சிஇஐஆர்) அமைக்கப்படும். இதன்மூலம் எந்த நெட்வொர்க்காக இருந்தாலும், செல்போன்கள் முடக்கப்படும்.

இவ்வாறு மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close