[X] Close

நானா படேகர் பாலியல் தொல்லை விவகாரம்; போலீஸ் அறிக்கையை எதிர்த்து நடிகை தனுஸ்ரீ தத்தா விரைவில் மனு


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:18 am
  • அ+ அ-

தாம் தொடுத்த பாலியல் வழக்கில் போலீஸார் வழங்கிய விசாரணை அறிக்கைக்கு எதிராக மனு தாக்கல் செய்ய பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பாலிவுட் இயக்குநர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, மும்பையில் உள்ள ஒஷிவாரா காவல் நிலையத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் அளித்தார்.

இதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீஸார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், தனுஸ்ரீ தத்தா தனது புகாரில் குறிப்பிட்ட படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர்களில் யாரும், இயக்குநர் நானா படேகர் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக ஒஷிவாரா காவல் நிலையம் சார்பில் கடந்த மாதம்விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஆதாரம் இல்லை

அதில், நானா படேகருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், பழிவாங்குவதற்காக பொய்யான புகார் அளித்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவல்துறையின் இந்த அறிக்கைக்கு எதிராகமனு தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு அந்தேரியில் உள்ள நீதிமன்றத்தில் தனுஸ்ரீ தத்தா நேற்று கோரிக்கை விடுத்தார். இதனை விசாரித்த நீதிபதி, அவருக்கு இதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close