[X] Close

அதிக கேள்விகள் கேட்க வேண்டும்: எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஓம் பிர்லா வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:17 am
  • அ+ அ-

ராஜஸ்தான் மாநில எம்எல்ஏக்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் மாநில முதல்வர் அசோக்கெலாட், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சட்டப்பேரவை சபாநாயகர் சி.பி. ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் ஒரு ஆண்டில் அதிக நாட்கள் நடக்க வேண்டும். அப்போதுதான்அரசின் பொறுப்பு அதிகரிக்கும். நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மக்கள் பிரதிநிதிகள் அதிகஅளவில் கேள்விகளை கேட்க வேண்டும். எம்எல்ஏ.வோ அல்லதுஎம்.பி.யோ ஒரு துறை சம்பந்தமாக அதிக அளவில் கேள்விகள் கேட்கும்போது அந்தத் துறையின் அமைச்சர் தனது துறை குறித்து அதிக அளவில் பரிசீலிக்க வாய்ப்புகள் ஏற்படும். மக்கள் பிரச்சினைகள் குறித்துஅவர்களின் பிரதிநிதிகள் அரசின்கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்குதீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அவை விதிகளின் அடிப்படையில் உறுப்பினர்கள் பேச வேண்டும். குற்றச்சாட்டுக்களை உண்மைகளின் அடிப்படையில் கண்ணியமாக தெரிவிக்க வேண்டும். அமளியில் ஈடுபடக் கூடாது. அமளியில் ஈடுபடுபவர்கள் தலைவர்கள் ஆக முடியாது. இவ்வாறு ஓம் பிர்லா பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close