[X] Close

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா திடீர் விலகல்: அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 18:31 pm
  • அ+ அ-

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியாவும் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2014-ம் ஆண்டைப் போல் இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாமல் போனது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கடந்த மாதம் 25-ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி தொடர்ந்து தனது முடிவை தளர்த்திக்கொள்ளாமல் இருந்து வருகிறார். விரைவில் கூடவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் ராகுல் காந்தியின் முடிவை ஆதரித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மிலிந்த் தியோரா இன்று விலகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியாவும் ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பை ஏற்கிறேன். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறேன். ராஜினாமா செய்யும் கடிதத்தை ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்துள்ளேன். கட்சிக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close