[X] Close

மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மிலிந்த் தியோரா ராஜினாமா


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 15:19 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பொருட்டு, தேசிய அளவில் தீவிர களப்பணியில் இறங்கப்போவதாக மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கட்சியை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழுவை மிலிந்த் தியோரை கட்சித் தலைமைக்கு பரிந்துரைத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மிலிந்த் தியோரா, சிவசேனா வேட்பாளர் அரவிந்த் சாவந்திடம் தோல்வி அடைந்தார். அதன்பின் கட்சிப்பணியில் ஈடுபட்டவந்த மிலிந்த் தியோரா கடந்த மாதம் 26-ம் தேதி டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, தான் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் இருப்பதாகவும், கட்சியின் களப்பணியில் ஈடுபட்டு கட்சியை வலுப்படுத்தஇருப்பதாகவும் தெரிவித்தார். இதை கருத்தை அனைத்து இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகியோரிடமும் மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மிலிந்த் தியோரா அறிவித்துள்ளார்.

தலைவர் பதவியில் இருந்து விலகியது குறித்து மிலிந்த் தியோராவிடம் நிருபர்கள் கேட்டோபது, " இப்போதுள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்த அனைவரும் புதிய பங்களிப்பை செய்ய தயாராக இருக்கிறோம். நான் தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்ட நிலையில் அதற்கு பதிலாக 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம். தேசிய அளவில் களப்பணியாற்றுவதற்கான வாய்ப்பையும், அதன்மூலம் கட்சியை கட்டமைக்கவும் முடியும் என நம்புகிறேன். இதற்கு மேல் ஒன்றும் கூற முடியாது, மும்பைகாங்கிரஸ் ஒற்றுமைக்கும் சிறப்பாக செயல்படவும் துணை புரிவேன் " என் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close