[X] Close

14 எம்எல்ஏக்கள் ராஜினாமா: வரும் 12-ம் தேதிக்குபின் கர்நாடகத்தில் தெளிவாக முடிவு பிறக்கும்: காங்கிரஸ் விளக்கம்


14-12

  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 12:33 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

கர்நாடக்தில் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 14 எம்எல்ஏக்கள் நேற்று ராஜினாமா செய்தததையடுத்து, மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, " வரும் 12-ம்தேதிக்கு பின் மாநிலத்தில் நல்ல முடிவு கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. மாநிலத்தில் உள்ள 224 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ், ஜேடியு கூட்டணிக்கு தற்போது 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. இதில் 13 எம்எல்ஏக்கள் நேற்று சபாநாயகர் ரமேஷ் குமாரைச் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளிக்க முயன்றனர்.

ஆனால், சபாநாயகர் அவரின் சேம்பரில் இல்லாததால், அவரின் தனிச்செயலாளரிடம் கடிதங்களை அளித்துவிட்டு, ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து நிலைமையைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே தனிப்பட்ட வேலை காரணமாக முதல்வர் குமாரசாமி அமெரிக்கா  பயணம் மேற்கொண்டுள்ளார். சபாநாயகர் ரமேஷ் குமார் செவ்வாக்கிழமைக்கு மேல்தான் ராஜினாமா கடிதங்கள் மீது முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஆடி  கவிழாது என்று நம்பிக்கை தெரிவிக்கிறது. ஆனால், மாநில பாஜகவினரோ ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தால் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறுகையில் " மத்தியில் ஆளும் பாஜக அரசு, பாஜக அல்லாத மாநில அரசுகளில் குழப்பம் விளைவித்து அதை கலைக்க முயற்சிக்கிறது. மாநிலக் கட்சிகளை வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கிறது. மாநில அரசியலி்ல நேரடியாக மத்திய அரசு தலையிடுகிறது

ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் எனத் தெரியவி்லலை. வரும் 12-ம் தேதிக்குபின் மாநிலத்தின் நிலை குறித்து தெளிவாக முடிவு கிடைக்கும். மாநிலத்தில்நான் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படுவேன் எனும் கருத்து கூட்டணியை சிதைக்கும் கருத்து , கட்டுக்கதை" எனத் தெரிவித்துள்ளார்.

deva.jpg 

இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜன கார்கே, அகமது படேல், குலாம்நபி ஆசாத், ரன்தீப்சுர்ஜே வாலா, ஆனந்த் சர்மா ஆகியோர் நேற்று இரவு சந்தித்து கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த கூட்டத்துக்குப்பின் நிருபர்களிடம் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறுகையில், " கர்நாடகத்தில் ஆளும் கூட்டணி அரசுக்கு முழுப்பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், பாஜக எம்எல்ஏக்களை விலைகொடுத்து வாங்கி கலைக்க முயற்சிக்கிறது. பட்டப்பகலில் ஜனநாயகம் சிறுமைப்படுத்தப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசால் கர்நாடக்ததில் பட்டப்பகலில் அரசமைப்புச் சட்டம் காலால் நசுக்கப்படுகிறது " எனக் குற்றம்சாட்டினார்.

இந்ந சூழலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவேகவுடா இல்லத்தில் அந்த கட்சியினர் காலை முதல் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர்களும் தேவேகவுடாவைச் சந்தித்து பேசி வருகின்றனர்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close