[X] Close

சமஸ்கிருத மொழி கற்பிக்க 5 கிராமங்கள் தத்தெடுப்பு: மத்திய அரசு உத்தரவு


5

  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 12:03 pm
  • அ+ அ-

-பிடிஐ

சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க கிராமங்களை தத்தெடுத்து சமஸ்கிருத கல்வி வழங்கும்படி ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

சமஸ்கிருதமம் 3,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மொழியாகும். இம்மொழியை மக்களிடையே வளர்க்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மத்திய மொழி நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்'  தலைமை தாங்கினார்,

அப்போது அவர் பேசுகையில், ''சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் வகையில் மத்திய சமஸ்கிருத கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குறைந்தது இரண்டு சமஸ்கிருத மொழி பேசும் கிராமங்களையாவது உருவாக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனம் 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சமஸ்கிருதத்தை ஊக்குவிக்கும் நாட்டின் மூன்று மத்திய நிறுவனங்களில் ஒன்றான ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் 5 கிராமங்களைத் தத்தெடுக்க ஒப்புக்கொண்டது. கிராமத்து மக்கள் சமஸ்கிருத மொழியில் உரையாட வைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த நாடு முழுவதும் ஐந்து கிராமங்களை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

திரிபுராவில் ஜூபர்டா, இமாச்சல பிரதேசத்தில் மாஸ்கட், கர்நாடகாவில் சிட்டெபெயில், கேராளாவில் அடாட், மத்திய பிரதேசத்தில் பராய் ஆகிய கிராமங்களில் உள்ள ஒவ்வொருவரையும் சமஸ்கிருதத்திலேயே உரையாடவைக்க முடியும் என்று உறுதி வழங்கியுள்ளது.

இது தவிர, லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடா மற்றும் திருப்பதி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் இரண்டிரண்டு கிராமங்களைத் தத்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுமாறு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close