[X] Close

கர்நாடக அரசு நிச்சயம் கவிழாது: முன்னாள் முதல்வர் சித்தராமையா உறுதி


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 09:02 am
  • அ+ அ-

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு நிச்சயம் கவிழாது என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று அவர் கூறியதாவது: கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகளை ஊடகங்களில் கவனித்து வருகிறேன். எல்லாவற்றையும் பொறுமையாக பார்க்க வேண்டும். இதுபோன்ற சூழல்களை எல்லாம் ஏற்கெனவே பார்த்துவிட்டேன். குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஒன்றும் ஆகாது. நிச்சயம் கவிழாது. ராஜினாமா செய்துள்ள எம்எல்ஏக்களுடன் காங்கிரஸார் பேசி வருகின்றனர். அவர்க‌ளின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டால்தானே ஆட்சி கவிழும்? நாங்கள் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பேசி, பிரச்சினையை சுமூகமாக தீர்ப்போம். அவர்கள் எங்களை விட்டு போகமாட்டார்கள். தற்போது மேலிட தலைவர் கே.சி.வேணுகோபால் பெங்களூரு வந்துவிட்டார். அவருடன் பேசி நல்ல முடிவெடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மஜதவுக்கு பாதிப்பில்லை

முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான‌ தேவகவுடா கூறுகையில், ''எனக்கு எந்த விஷயமும் தெரியாது. ஊடகங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மஜத தலைவர்களுடன் பேசி முடிவெடுக்கப்படும். தற்போதைய விவகாரத்தில் என்ன நடந்தாலும் மஜதவுக்கு பாதிப்பு இல்லை'' என்றார்.

அமைச்சர் நம்பிக்கைஅமைச்சர் ரேவண்ணா கூறுகையில், “குமாரசாமி அடுத்த 4 ஆண்டுகளுக்கும் முதல்வராக இருப்பார். ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை. தற்போது நடப்பதைப் போன்ற பல சம்பவங்களை பார்த்துவிட்டேன்'' என்றார். கர்நாடகாவில் கூட்டணி அரசை கவிழ்க்க சித்தராமையா முயற்சிக்கிறார் என்று முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் ஆட்சி கவிழாது என்று சித்தராமையா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close