[X] Close

அமைச்சர் அமித் ஷா வருகைக்கு முன் விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: சென்னையை சேர்ந்த இளைஞர் கைது


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 09:03 am
  • அ+ அ-

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகைக்கு சில மணி நேரத்துக்கு முன் ஹைதராபாத் விமான நிலையத்தில் நேற்று வெடிகுண்டு புரளி ஏற்பட்டது. இது தொடர்பாக சென்னை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

செகந்திராபாத்தில் உள்ள தனி யார் நிறுவனத்தில் சென்னையை சேர்ந்த கே.வி.விஸ்வநாதன் (24) என்பவர் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை செல்வதற்காக நேற்று காலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் காத்திருந்தார். மது போதையில் இருந்த அவர், அங் கிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் தான் சென்னை செல்லும் விமா னம் உட்பட 2 விமானங்களில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் வந்துள்ளது என கூறியுள்ளார். இதனால் பரபரப்பு அடைந்த சிஐஎஸ்எப் வீரர்கள் 2 விமானங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. விஸ்வநாதன் புரளி ஏற்படுத்தியது தெரியவந்ததால் அவரை போலீஸா ரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதி காரி ஒருவர் கூறும்போது, “சென்னைக்கு காலை 8 மணிக்கு புறப்படும் விமானத்திற்காக அதி காலை 1.30 மணிக்கே விஸ்வ நாதன் விமான நிலையம் வந்து விட்டார். காலை வரை இங்குள்ள மதுபானக் கூடத்தில் இருந்தார். காலை 6.30 மணிக்கு புகைப் பிடிக்கும் அறைக்கு சென்று வந்த பிறகு, சிஐஎஸ்எப் அதிகாரியிடம் வெடிகுண்டு குறித்த பொய்யான தகவலை கூறியுள்ளார்.

இவர் காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்து வந் துள்ளார். இவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம். விசாரணை நடத்தி வருகிறோம். வெடிகுண்டு புரளி மற்றும் சோதனை நடவடிக்கையில் விமான சேவையில் எந்த பாதிப்பும் இல்லை. விமானங்கள் வழக்கம் போல் இயங்கின” என்றார்.

இந்நிலையில் பாஜக உறுப் பினர் சேர்க்கை தொடர்பான நிகழ்ச்சிக்காக அக்கட்சியின் தலை வரும் மத்திய உள்துறை அமைச் சருமான அமித் ஷா, திட்டமிட்டபடி நேற்று பிற்பகல் ஹைதராபாத் வந்து சேர்ந்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close