[X] Close

திருப்பதி கோயிலில் ஜூன் காணிக்கை ரூ.100.37 கோடி


100-37

  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 09:01 am
  • அ+ அ-

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் மட்டும் தற்போது ஆண்டுக்கு ரூ. 1,200 கோடி வரை காணிக்கை வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 100.37 கோடிசெலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் நேற்று அறிவித்தது. கடந்தஆண்டில் இதே ஜூன் மாதத்தில் உண்டியல் காணிக்கை ரூ.91.81கோடியாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 24.66 லட்சம்பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். 71.02 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதமும், 1.13 கோடி லட்டு பிரசாதமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 12.88 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close