[X] Close

பாரம்பரிய நகர பட்டியலில் இணைந்தது ஜெய்ப்பூர்


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 08:54 am
  • அ+ அ-

யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 43-வது கூட்டம் அஜர்பைஜான் தலைநகர் பகுவில் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உலக பாரம்பரிய பகுதிகள் பட்டியலில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரை சேர்க்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதுவரை 167 நாடுகளைச் சேர்ந்த 1,092 இடங்கள் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:கட்டிடக்கலை, கலாச்சாரம் மற்றும் வீரத்துடன் தொடர்புடையது ஜெய்ப்பூர் நகரம். அழகான மற்றும் ஆற்றல் மிக்க ஜெய்ப்பூரின் விருந்தோம்பல் பண்பு அனைத்து தரப்பு மக்களது கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. இந்த நகரம் உலக பாரம்பரிய பகுதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். சுற்றுலாத் துறைக்கு ஊக்கம்ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக பாரம்பரிய பகுதிகள் பட்டியலில் ஜெய்ப்பூர் நகரம் சேர்க்கப்பட்டிருப்பது பெருமையாக உள்ளது. இதன்மூலம் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் கிடைக்கும்” என பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் தலைநகராக விளங்கும் ஜெய்ப்பூர் 1727-ம் ஆண்டு 2-ம் சவாய் ஜெய் சிங் என்பவரால் நிறுவப்பட்டது. சிறப்பாக திட்டமிடப்பட்டு இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close