[X] Close
 

ரூ.125 நாணயத்தின் பின்னணி என்ன?


google-doodle-celebrates-prasanta-chandra-mahalanobis-125th-birthday

  • பாரதி
  • Posted: 29 Jun, 2018 10:18 am
  • அ+ அ-

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று ரூ.125 மதிப்பிலான நாணயத்தை வெளியிடுகிறார். அது என்ன குறிப்பிட்டு ரூ.125 என்று யோசித்தீர்கள் என்றால், அதற்கு பதிலிருக்கிறது.

இன்று கூகுள் டூடுலை அதற்குமுன் பார்த்துவிடுங்கள். அதை க்ளிக் செய்தால், பிரசந்த சந்திர மஹலனோபிஸிம் 125-வது பிறந்தநாள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். பி.சி.மஹலனோபிஸின் 125-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில்தான் இன்று ரூ.125 நாணயம் வெளியிடப்படுகிறது.

யார் இந்த மஹலனோபிஸ்?
1893-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் பிறந்தார் மஹலனோபிஸ். புள்ளியியல் துறையில் முன்னோடி இவர். மக்கள் தொகை சார்ந்த படிப்பில் புள்ளியியலை ஒரு அளவுகோலாக பயன்படுத்தியவர். முதல் திட்டக் குழுவின் முக்கிய உறுப்பினர்க்ளுள் ஒருவர்.

இந்திய புள்ளியியல் மையம் உருவாகக் காரணமாக இருந்தவர். கொல்கத்தா பிரஸிடன்ஸி கல்லூரியில் பயிற்றுவித்தார். தேசிய புள்ளியியல் கணக்கெடுப்பு மையம் NSSO, மத்திய புள்ளியியல் மையம் CSO ஆகியவை அமைய அடித்தளமிட்டார்.

2007 முதல்..
கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 29-ம் தேதி தேசிய புள்ளியியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சமூக பொருளாதார திட்டமிடுதலிலும் அரசு கொள்கைகளை வகுப்பதிலும் புள்ளியியலின் முக்கியத்துவம் என்னவென்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் அரசு சார்ந்த புள்ளியியல் விவரங்களில் தரத்தை உறுதி செய்தல் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close