[X] Close

இந்தியா பெண்களுக்கு ஆபத்தான நாடு என்பதை ஏற்க முடியாது: ஆய்வு முடிவை நிராகரிக்கும் காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் 


shashi-tharoor-dismisses-survey-as-sweeping-statement

தனது சமீபத்திய புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் | கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 28 Jun, 2018 15:51 pm
  • அ+ அ-

உலகிலேயே பெண்கள் வாழ ஆபத்தான நாடு இந்தியா தான் என்ற சமீபத்திய அறிக்கை ஒன்றை, பொத்தாம் பொதுவானது என்று காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் நிராகரித்துப் பேசியுள்ளார். மேலும், அந்தப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்றது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை நடத்திய ஆய்வு முடிவில், உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பிரச்சினைகளை அலசும் 550 நிபுணர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இவ்வாறு தெரியவந்துள்ளது. 

இண்டோ - அமெரிக்கன் ஆர்ட்ஸ் கவுன்சில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் பேசியதாவது: 

"இது ஒவ்வொரு இந்தியரையும், குறிப்பாக ஒவ்வொரு இந்திய ஆண்மகனையும் வெட்கப்பட வைத்துள்ளது. அதில் கேள்வியே இல்லை. ஆனால் இப்படி உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு போன்ற பொத்தாம் பொதுவான கருத்தை ஏற்றுக்கொள்வது சற்று கடினம்.

இந்தியாவில் பாலின சமத்துவம், பெண்கள் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, காவல்துறையில் அதிக பெண்களுக்கான தேவை ஆகியவை குறித்து தொடர்ந்து குரலெழுப்பப்படுகின்றன. ஆனால் அப்போதும் ஒப்பீடளவில் இந்தியாவில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர். ஆப்கானிஸ்தானில், சவுதி அரேபியாவில் இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் அவர்களுக்கு இங்கு இல்லை. சிரியாவில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையைப் போல இங்குள்ள பெண்கள் எதிர்கொள்வதில்லை. 
ஆஃப்கானிஸ்தான், சிரியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. 

இந்த குறிப்பிட்ட ஆய்வு முடிவை நாம் ஒப்புக்கொள்கிறோமோ, இல்லையோ, ஆனால் பிரச்சினை இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும். பல காரணங்களால் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதை சரி செய்ய அரசாங்கமும், சமுதாயமும் இணைந்து செயல்பட வேண்டும். இதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த அறிக்கை சொல்வதை என்னால் அப்படியே ஏற்க முடியாது" என்று சஷி தரூர் கூறியுள்ளார். 

தனது சமீபத்திய புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் | கோப்புப் படம்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close