[X] Close
 

ரயில் ஏசி பெட்டிகளில் இனி நைலான் போர்வை: மாதத்துக்கு 2 முறை சலவை 


railways-to-provide-nylon-blankets-in-ac-coaches-to-wash-them-twice-a-month

  • பாரதி
  • Posted: 27 Jun, 2018 17:03 pm
  • அ+ அ-

ரயில்களில் ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளிப் போர்வைகளுக்கு பதிலாக நைலான் போர்வை வழங்கவும் போர்வைகளை மாதத்துக்கு குறைந்தது இரண்டு முறையாவது துவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் இந்தப் போர்வைகள் சலவை செய்யப்படுகின்றன.

அதேபோல் போர்வைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அண்மையில், மத்திய கணக்கு தணிக்கைத் துறை ஜெனரல், ரயில்வே வாரியம் அழுக்கான போர்வைகளைத் தருவதாக விளாசினார். ரயிலில் வழங்கப்படும் உணவு உண்பதற்கு தகுதியற்றதாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகளையும் தரம் உயர்த்தும் வேலையில் ரயில்வே துறை இறங்கியுள்ளது.

சலவை செய்வதற்கு எளிமையாக இருக்கும் வகையில் நைலான் கலந்து தயாரிக்கப்பட்ட போர்வையின் எடை 450 கிராமாக இருக்கும். இவற்றில் 60% கம்பளியும் 15% நைலானும் இருக்கும். தற்போது வழங்கப்படும் கம்பளிகளின் எடை 2.2 கிலோவாக இருக்கிறது.

இந்த புதிய போர்வை குறித்த தகவல் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்குவதற்காக 4 லட்சம் போர்வைகள் உள்ளன. இவற்றை சுத்தம் செய்ய 50 சலவை மையங்கள் இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close