[X] Close
 

வேலையை உதறித் தள்ளிவிட்டு பிச்சைக்காரர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவர்


pune-doctor-who-gave-up-his-job-to-visit-and-treat-beggars-for-free

  • kamadenu
  • Posted: 27 Jun, 2018 16:39 pm
  • அ+ அ-

கோவில்கள், தேவாலயங்கள், ட்ராஃபிக் சிக்னல்கள் ஆகிய இடங்களில் இந்தியாவில் பிச்சைக்காரர்களை பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அவர்களின் வாழ்நிலையை மாற்ற நாம் எந்தவொரு முயற்சியும் செய்யாமல் கடந்து வந்துவிடுவோம். ஆனால், மருத்துவர் அப்ஜித் சோனவானே அவர்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

புனேவை சேர்ந்த மருத்துவர் அப்ஜித் சோனவானே தினந்தோறும் புனே தெருக்களுக்குள் சென்று, ஆதரவற்ற பிச்சைக்காரர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார். பிச்சைக்காரர்களை தொழில்முனைவர்களாக ஆக்குவதற்கான அப்ஜித்தின் புதிய முயற்சி அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்கிறது.

அப்ஜித், புனே தெருக்களுக்குள் நுழைந்து யாருக்காவது தன் உதவி தேவைப்படுகிறதா என்று ஆய்ந்து கொண்டே இருப்பார். மருத்துவருக்கான வெள்ளை உடை, ஸ்டெத்தஸ்கோப்புடன் வலம் வரும் அப்ஜித் தன் மருத்துவ பணிக்கான கடமைகளை உணர்ந்திருக்கிறார். 1999-ல் மருத்துவ படிப்பை படித்த அப்ஜித்தின் முதல் பணி, கிராமமொன்றில் வீடு, வீடாக சென்று மருத்துவ பணியாற்றுவதுதான். நாளொன்றுக்கு 60-70 பேருக்கு அப்ஜித் சிகிச்சை அளிப்பாராம். அதன்மூலம் அவருக்கு ரூ.30 மட்டும் தான் வருமானமாக கிடைத்துள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்தப் பேட்டியொன்றில், "நான் மருத்துவ உதவி அளிக்கும் முதியவர்கள் பொதுவாக தங்கள் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் தான். அதனால், பிச்சை எடுப்பதை விட வேறு வழி அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு நான் உடல் பரிசோதனை செய்வேன். இலவசமாக மாத்திரைகள் தருவேன். திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நான் இந்த பணியை செய்வேன்” என்கிறார் அப்ஜித்.

இலவசமாக சிகிச்சை அளிப்பதால் அப்ஜித்துக்கு எந்தவொரு வருமானமும் இல்லை. அதனால், பசி கொடுமைக்கு ஆளாகியுள்ளார் அப்ஜித். அவரது பாக்கெட்டில் காசே இல்லாத காலமும் இருந்துள்ளது. அப்போது தான், பிச்சை எடுக்கும் வயதான தம்பதிகள் அப்ஜித்துக்கு உதவ முன் வந்துள்ளனர். தினமும் தங்களுடைய உணவில் பாதியை அப்ஜித்துக்கு எடுத்து வைப்பார்களாம். 

இணையதளம் ஒன்றுக்கு அப்ஜித் அளித்த பேட்டியில், “என்னைப் பொறுத்த வரைக்கும் அந்த வயதான தம்பதிகள் எனக்கு பெற்றோர்கள் ஆவர். மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் அவர்கள் எனக்கு உதவியுள்ளனர். இந்த பெருந்தன்மைக்கு நான் என்ன கைமாறு செய்வேன். நான் அவர்களுக்கு வாழ்க்கை முழுதும் கடன்பட்டுள்ளேன்” என்றார்.

இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளால் அப்ஜித் சர்வதேச அளவிலான மருத்துவ நிறுவனமொன்றில் பணிக்கு சேர்ந்தார். ஆனால், மீண்டும் அந்த பணியை உதறித் தள்ளிவிட்டு இயலாத மக்களுக்காக இலவச சேவையை துவங்கி விட்டார்.

இயலாதவர்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதுடன் அவர்கள் சிறியளவிலான தொழில் செய்வதற்கான பொருளாதார உதவியையும், மனதிடத்தையும் அளித்து வருகிறார். இதுவரை 37 முதியவர்களுக்கு சிறியளவில் தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார் அபிஜித்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close