[X] Close

ஜீன்ஸ் டி-ஷர்ட் அநாகரிகமான உடை! அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு


rajasthan-labour-department-asks-employees-not-to-wear-jeans-t-shirt-to-work

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Jun, 2018 16:36 pm
  • அ+ அ-

ராஜஸ்தான் தொழிலாளர் துறை அதன் ஊழியர்கள் இனி அலுவலகத்துக்கு ஜீன்ஸ் டிஷர்ட் போன்ற உடைகளை அணிந்து வர தடை விதித்துள்ளது. தொழிலாளார் ஆணையர் கிரிராஜ் சிங் குஷ்வாஹா இது தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.

அந்த சுற்றறிக்கையில், "அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் அடிக்கடி ஜீன்ஸ் அணிவதைக் காண முடிகிறது. டிஷர்ட் போன்ற அநாகரிகமான உடையையும் சிலர் அணிந்து வருகின்றனர். இத்தகைய உடைகள் அலுவலக மரியாதையைக் கெடுப்பதாக உள்ளது. இனி அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் பேன்ட் ஷர்ட் போன்ற உடைகளையே அணியுமாறு அறிவுறத்தப்படுகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஜீன்ஸ், டிஷர்ட் அநாகரிகமான உடை என எதை வைத்து சொல்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும். ராஜஸ்தான் அரசு இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்காத நிலையில் தொழிலாளர் துறை ஆணையர் இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருப்பது ஏற்புடையதல்ல. இந்த சுற்றறிக்கைக்கு ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்போகிறோம்" என ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் கஜேந்திரா சிங் தெரிவித்திருக்கிறார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close