[X] Close
 

ட்ரோல்களால் ட்விட்டரைவிட்டே வெளியேறினார் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி


pawan-kalyans-ex-wife-quits-twitter

  • பாரதி
  • Posted: 27 Jun, 2018 15:41 pm
  • அ+ அ-

இரண்டாவது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்ததற்காக தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேனு தேசாயை ட்விட்டர்வாசிகள் மிகக் கடுமையாக விமர்சித்ததால் மன உளைச்சலில் ட்விட்டர் தளத்திலிருந்தே வெளியேறியிருக்கிறார்.

நடிகர் பவன் கல்யாணின் 2-வது மனைவி ரேனு தேசாய். பவன் கல்யாணுக்கும் மாடலும் நடிகையுமான ரேனு தேசாய்க்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு ஆத்விக், ஆத்யா என்று இரண்டு குழந்தைகள். ஆனால், இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன்பின்னர் பவன் கல்யாண் மூன்றாவது திருமணமும் செய்து கொண்டார். ரேனு குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்தார். தற்போது அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
இவரது நிச்சயதார்த்தம் அண்மையில் புனேவில் நடந்தது. அவரது நிச்சயதார்த்தப் புகைப்படத்தையும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து பவன் கல்யாணின் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் ரேனுவை ட்ரோல் செய்தனர். ஒரு பெண் 2-வது திருமணம் செய்து கொள்வது இழுக்கு என்றும் தங்கள் தலைவர் பவன் கல்யாணை ரேனு அசிங்கப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்தனர்.
ஒரு குறிப்பிட்ட எல்லைவரை ரேனுவும் சிலருக்கு பதிலளித்துவந்தார் ஆனால் ட்ரோல்களின் அட்டகாசம் அதிகமானது. இதனையடுத்து ட்விட்டரில் இருந்தே ரேனு வெளியேறினார்.

ரேனுவின் 2-வது திருமணத்துக்கு பவன் கல்யாணம் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார், "ரேனுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மகிழ்ச்சியின் புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்துவைக்கும் அவருக்கு இயற்கை அன்னையும் இறைவனும் நல்லாசி புரிய வாழ்த்துகிறேன். அவருக்கு அளவில்லா செல்வமும் நலமும் அமைதியும் கிட்டட்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close