[X] Close
 

வேலைபோய்விட்டதா?- பிஎஃப் பணத்தில் 75% எடுத்துக்கொள்ளலாம்


epfo-members-can-now-withdraw-75-percent-of-pf-balance-after-30-days-of-unemployment

  • பாரதி
  • Posted: 27 Jun, 2018 12:30 pm
  • அ+ அ-

இபிஎஃப்ஓ நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்திருக்கிறது. அதன்படி ஒருவர் வேலையிழந்துவிட்டாலோ இல்லை வேலையில் இருந்து விடுபட்டாலோ அடுத்த ஒரு மாதத்தில் அவரது பிஎஃப் தொகையில் இருந்து 75% பணத்தைப் பெற முடியும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி ஒருவர் வேலை இழந்ததிலிருந்து 2 மாதங்களுக்குப் பின் முழுப்பணத்தையும் பெற்றுக் கொள்ள வசதி இருக்கிறது.

ஆனால், புதிய நடைமுறையில் 75% பணத்தை பிஎஃப் அட்வான்ஸ் என்ற திட்டத்தின் கீழ் பெறலாம். இந்த முடிவு செவ்வாய்க்கிழமை கூடிய அலுவல் கூட்டத்தில் எட்டப்பட்டது.

எப்போதெல்லாம் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்?
வேலையிழந்த 2 மாதங்களில் பிஎஃப் பணத்தை முழுமையாக எடுப்பதைப் போன்று வீடு வாங்க மற்றும் கட்ட, கடன் அடைக்க, தன்னுடைய திருமணம் அல்லது தனது மகன், மகள், சகோதரரின் திருமணம், குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவு ஆகியனவற்றிற்காகவும் பிஎஃப் தொகையைப் பெற முடியும்.

ஆனால், ஒவ்வொரு தேவைக்கும் குறிப்பிட்ட அளவிளான தொகையையேப் பெற முடியும். குறிப்பாக திருமணத்துக்கு என்றால் ஒருவர் 50% பிஎ தொகையைப் பெறலாம். ஆனால், அவர் அதற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகளாவது பிஎஃப் சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.

இபிஎஃப்ஓ அலுவலகம் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிஎஃப் வைப்புத் தொகை மீதான வட்டி 8.55% என்றளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close