[X] Close
 

குக்கர் வரதட்சனையில் அடங்காது!- மும்பை உயர் நீதிமன்றம்


pressure-cooker-not-dowry-item-hc-rules

  • பாரதி
  • Posted: 27 Jun, 2018 10:24 am
  • அ+ அ-

ஷ்ரவாணி ஷக்பால்

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒடிசாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது திருமணத்துக்காக 1001 மரக்கன்றுகளை வரதட்சனையாகக் கேட்ட செய்தி வைரலானது.

அந்த வரதட்சனையில் அர்த்தமிருந்ததாக விமர்சனங்கள் வந்தாலும்கூட தான் வரதட்சனையை எந்த வகையிலும் ஊக்குவிக்கவில்லை. திருமணம் போன்ற நிகழ்வின்போது இப்படி மரம் நடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது நிறைய பேரைச் சென்றடையும் என்பதற்காகவே அப்படிச் செய்ததாகக் கூறினார்.

ஆனால், 28 ஆண்டுகளாக ஒரு வரதட்சனை வழக்கு நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது. மும்பை உயர் நீதிமன்றம் அந்த வழக்கின் தீர்ப்பில் குக்கர் வரதட்சனையில் அடங்காது எனத் தெரிவித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் விடுவித்திருக்கிறது. மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது மாமனார் மாமியாரை விடுவித்த உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கு பின்னணி:
கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி குசும் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கும் பிரதீப் நிம்பேகருக்கும் திருமணமாகி ஒன்றரை மாதங்கள்தான் ஆகியிருந்தன. இந்நிலையில் குசுமின் பெற்றோர் அவர்களது மகள் தற்கொலை செய்து கொள்ள மாமியார் மாமனாரே காரணம். அவர்கள் வரதட்சனையாக குக்கர் கேட்டு தொந்தரவு செய்ததாலேயே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் அளித்தனர்.

ஆனால், கீழ் நீதிமன்றம் இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்தது. இதனை எதிர்த்து மாநில அரசு மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் அமர்வில் மேல்முறையீடு செய்தது. 
அதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பெண் வீட்டாரிடமிருந்து குளிர்சாதனப் பெட்டி, மோட்டார் சைக்கிள், குக்கர் ஆகியனவற்றை வரதட்சனையாகக் கேட்டதாகவும் எனவே இபிகோ 498 ஏ-வின் கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரியது,

அதுதவிர குசுமின் மாமியார் அண்டைவீட்டாரிடம் குசும் வீட்டில் ஒரு பிரஷர் குக்கர் கூட சீதனமாகத் தரவில்லை எனப் புலம்பியதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கிலிருந்து குசுமின் மாமனார் மாமியாரை விடுவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிபதிகள் ஆர்.கே.தேஷ்பாண்டே, எம்.ஜி.கீராத்கர் ஆகியோர் கூறும்போது, "போதிய ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் கீழ் கோர்ட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்தது சரியே. அதுமட்டுமல்லாமல் குக்கர் தரவில்லை என மாமியார் அண்டை வீட்டாரிடம் குறை கூறியது வரதட்சனைக் கொடுமையாகாது. மேலும் வரதட்சனையாகக் கருதும் அளவுக்கு குக்கர் அவ்வளவு பெரிய பொருளும் அல்ல" எனத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close