[X] Close

மனைவி, மகனைப் பராமரிப்பது கணவனின் கடமை: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு


it-is-husband-s-duty-to-maintain-wife-and-son-court

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 26 Jun, 2018 16:51 pm
  • அ+ அ-

குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது கணவனின் கடமை என டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. 

குடும்ப வன்முறை காரணமாக பிரிந்து சென்ற மனைவி மற்றும் மகனுக்கு மாதம் ரூ. 15,000 பராமரிப்பு செலவுக்கு தர வேண்டும் என்று மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அந்தக் குடும்பத்தின் தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது.

தான் வாடகை வீட்டில் வாழ்ந்து வருவதாகவும். மாதம் ரூ. 40,000 மட்டுமே சம்பளம் பெறுவதால் இந்த பராமரிப்பு பணத்தை 10,000 ரூபாயாக குறைக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர் மேல் முறையீடு செய்திருந்தார். இதை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் குமார் நிராகரித்துவிட்டார். 

இளைய மகன், பிரதிவாதியுடன் வாழ்ந்து வருகிறார். தனது மனைவி மற்றும் இளைய மகனை பராமரிப்பது கணவனின் கடமை. மேல் முறையீடு செய்துள்ளவரே (கணவர்) தனக்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வருவதாகக் கூறியுள்ளார். பிரதிவாதி வேலைக்குச் செல்லாதவர். மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றமே பிரதிவாதி மற்றும் அவரது இளையமகனுக்கு இடைக்கால பராமரிப்புக்கு பணம் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனால் இந்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று செஷன்ஸ் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.  

மனைவிக்கு மாதம் 10,000 ரூபாயும், மகனுக்கு 5,000 ரூபாயும் பரமாரிப்பு செலவாக தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதிவாதியான மனைவி, தனது கணவர் மாதம் 45,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றும், மேலும் கூடுதலாக சொத்துக்களிலும் பங்கு வைத்துள்ளார் என்றும் கூறியிருந்தார். 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close