[X] Close

சுடுகாட்டில் தூங்கிய தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.!


heres-why-this-tdp-minister-slept-in-a-graveyard

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jun, 2018 11:39 am
  • அ+ அ-

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவர் சுடுகாட்டில் படுத்துறங்கிய சம்பவம் வைரலாகி வருகிறது. கடந்த 22-ம் தேதி இரவு பாலக்கோல் பகுதியில் உள்ள இந்து மயான பூமியில் எம்.எல்.ஏ., நிம்மல ராம நாயுடு தூங்கினார். இது தற்போது ஊடக கவனம் பெற்று வருகிறது.

பொதுவாக, அரசியல்வாதி சுடுகாட்டில் பூஜை என்றெல்லாம்தான் செய்தி வரும். இந்நிலையில், சுடுகாட்டில் எம்.எல்.ஏ., ஏன் தூங்கினார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டபோதுதான் அவர் நல்லெண்ண அடிப்படையில் அவ்வாறு செய்தது தெரியவந்தது.

தனது தொகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை ராம நாயுடு மேற்பார்வை செய்துவந்தார். அப்போது தனது தொகுதிக்கு உட்பட்ட மயான பூமியில் மட்டும் எந்த மேம்பாட்டுப் பணியும் நடைபெறவில்லை என்பதை அறிந்தார். விசாரித்தபோது ஊழியர்கள் மயானத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டபோது பிணங்கள் தென்பட்டதால் அச்சத்தில் வேலை செய்யவில்லை என்றனர். தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக ஒருநாள் இரவு எம்.எல்.ஏ., சுடுகாட்டில் தூங்கியுள்ளார்.

அடுத்தநாள் முனிசிபல் நிர்வாக அதிகாரிகளுடன் மயான பூமி வேலை குறித்து ஆலோசனை நடத்தினார்.

கேரள முதல்வர் பாராட்டு”

எம்.எல்.ஏ., நிம்மல நாயுடுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியிருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சுடுகாட்டில் உறங்கிய தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ., நிம்மல ராம நாயுடுவுக்கு பாராட்டுகள். சுடுகாட்டு மேம்பாட்டுக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கியும்கூட பேய் நடமாட்டம் பயன் எனக் கூறி பணியாட்கள் வேலை செய்யாததால் அவர்களது பயத்தைப் போக்க எம்.எல்.ஏ., சுடுகாட்டில் உறங்கியுள்ளார்.

மூடநம்பிக்கைக்கு எதிரான போராளி அவர். அவருக்கு எனது பாராட்டுகள். அவருடைய இந்த முயற்சி உள்ளூர் நலனுக்காக மட்டுமல்ல. தேச நலனுக்கானது. மூடநம்பிக்கைகளை எதிர்த்து அவர் செய்துள்ள இந்தக் காரியம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது" எனப் பாராட்டியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close