[X] Close

இந்தியாவின் முதல் ட்ரைபல் குயின் பட்டம் வென்ற பல்லவி துருவா


odisha-pallavi-darua-crowned-as-indias-first-tribal-queen

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jun, 2018 10:10 am
  • அ+ அ-

அழகிப் போட்டிகளுக்கு பஞ்சமில்லை. ஊர் அழகி முதல் உலக அழகிப் போட்டிவரை ஆண்டுதோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் முதன்முறையாக ட்ரைபல் குயின் அதாவது பழங்குடிப் பெண்களுக்கான அழகிப் போட்டி நடத்தப்பட்டிருக்கிறது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த் பல்லவி துருவா முதல் ட்ரைபல் குயின் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உத்கல் மண்டபத்தில் இந்தப் போட்டி நடந்துள்ளது.

தித்லாகர் மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சமி மாஜி, மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ராஷ்மிரேகா ஹன்ஸ்தா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். இந்த மூவரும் பழங்குடி மக்களின் கலாச்சாரம் சார்ந்த குறும்படம் ஒன்றில் நடிக்கவுள்ளனர். மும்பையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

தனது வெற்றி குறித்து பல்லவி, "என்னைப் போன்ற பழங்குடிப் பெண்கள் கல்வி கற்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. இப்போது நான் அழகிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். இனி நான் என் சமூகத்தின் மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாராணமாக இருப்பேன் என நம்புகிறேன். மூட நம்பிக்கைகளை விடுத்து அவர்கள் அனைவரும் இந்த உலகத்தை எதிர்கொள்வர் என நம்புகிறேன்" என்றார்.
ட்ரைபல் குயில் பட்டத்தைத் தவிர புகைபடத்துக்கு ஏற்ற முகத்தோற்றம், ஆரோக்கியமான தோல், சிறந்த ஆபரணங்கள் அணிந்திருந்தவர் உட்பட 7 பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டிக்கு எஸ்.சி., எஸ்.டி., துறை, ஒடிசா மாநில அரசு, ஒடிசா சுற்றுலாத் துறை ஆகியன உறுதுணையாக இருந்தனர். இந்தப் போட்டிக்காக இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பழங்குடிப் பெண்கள் வந்திருந்தனர். இறுதிச் சுற்றில் 20 பேர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான சிதாத்மிகா கதுவா கூறும்போது, "இன்று நாங்கள் வரலாறு படைத்துள்ளோம். பழங்குடி கலச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் தேசிய அளவில் ஒரு நிகழ்ச்சியை நாங்கள் நடத்தியிருக்கிறோம். ராணி என்பவள் அழகை பறைசாற்றுபவள் மட்டுமல்ல. இதுவரை பழங்குடிகளை அவர்களது கலைகள் மூலமே அறிமுகப்படுத்தியிருக்கிறோம், இந்தப் போட்டி மூலம் தனிநபர் அடையாளத்தை நாங்கள் முன்னிறுத்த முயற்சி செய்திருக்கிறோம்" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close