[X] Close

ஏழைகளுடன் தொடர்பற்றுப்போனது பாஜக: உங்கள் பார்வையில் சிவசேனாவின் குற்றச்சாட்டு எத்தகையது?


bjp-has-lost-contact-with-poor-shiv-sena

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Jun, 2018 16:42 pm
  • அ+ அ-

பாஜகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சியை அன்றாடம் விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது சிவசேனா. சில வேளைகளில் ஒரு வலுவான எதிர்க்கட்சியைப்போல் அதன் கேள்விகள் அமைந்துவிடுகின்றன.

அந்த வரிசையில் இன்று பாஜகவை மீண்டும் கடுமையாக சாடியுள்ளது சிவசேனா.

சிவசேனாவின் அதிகாரபூர்வ இதழான சாம்னாவில், "மாதுரி தீட்சித்தையும் சல்மான் கானையும் ரத்தன் டாடாவையும் அம்பானியையும் அதானியையும் தங்கள் ஆதரவுக்கு அழைக்கும் பாஜக ஏழை எளிய மக்களுடன் தொடர்பற்றுப்போனது. 
மகாராஷ்டிரா மாநிலம் வறுமையில் உழல்கிறது. பசி ஆட்டிப்படைக்கிறது. மக்கள் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். மத்தியிலும் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகதான் இதற்கெல்லாம் காரணம்.
விவசாயிகள் நலன் மீது அக்கறையில்லாத இந்த அரசு புல்லட் ரயில்கள், மெட்ரோ திட்டங்கள், ஹைப்பர் சிட்டிகள் என ஆடம்பரத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மோடி இனியும் ஏழை மக்களின் நலனுக்காக ஏதாவது செய்வார் என்ற மாயையில் இருந்து விடுபடுவோம்" என விமர்சிக்கப்பட்டுள்ளது.

சிவசேனாவின் இந்த குற்றச்சாட்டை வாசகர்களாகிய நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க முயன்று கொண்டிருக்கும் வேளையில் சிவசேனாவின் இந்தக் கருத்து எதை உணர்த்துகிறது.

உண்மையிலேயே பாஜக ஏழைகளிடம் இருந்து விலகி நிற்கிறது என நீங்களும் நினைக்கிறீர்களா? உங்கள் கருத்துகளை கீழே பதிவிடவும்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close