[X] Close

எனது உடல் மட்டுமல்ல நான்: தாய்ப்பால் ஊட்டுவதுபோல் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த மாடல் கருத்து


i-m-much-more-than-my-body-says-model-on-grihalakshmi-cover

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Jun, 2018 21:26 pm
  • அ+ அ-

"எனது உடல் மட்டுமல்ல நான். குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதுபோல் நான் தோன்றும் புகைப்படத்தில் எந்த ஆபாசமும் இல்லை என கேரள உயர் நீதிமன்றம் கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது" எனக் கூறியுள்ளார் மாடல் ஜிலு ஜோசப்.

கேரளாவின் பிரபலமான  கிரஹலக்‌ஷ்மி  பத்திரிகையின் அட்டைப்படத்தில் மாடல் ஒருவர் பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டுவது போல் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படம் ஆபாசத்தை விதைப்பதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்ததோடு, "ஒருவர் கண்ணுக்கு ஆபாசமாகத் தெரிவது மற்றொருவர் கண்களுக்கு கலைத்துவமாகத் தெரியலாம். ஒருவருக்கு வக்கிரமாகத் தெரிவது மற்றொருவருக்கு கவித்துவமாகத் தெரியலாம். இந்தப் படத்தில் ஆபாசம் இருப்பதாக நீதிமன்றத்துக்குத் தெரியவில்லை. ராஜா ரவி வர்மன் ஓவியத்தைப் பார்ப்பதுபோலத்தான் இந்தப் புகைப்படத்தை நாங்கள் பார்த்தோம். அழகு என்பது காண்போரின் கண்களில்தான் இருக்கிறது. அதேபோல்தான் ஆபாசமும்" எனக் கூறினர்.

இந்நிலையில் மாடல் ஜிலு ஜோசப், "எனது உடல் மட்டுமல்ல நான். அதையும் தாண்டி விரிந்திருக்கிறேன். எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே நான் செய்திருக்கிறேன். நான் அவற்றில் தோற்றும் போயிருக்கலாம். ஆனால் அதில் எனக்கு எப்போதும் வருத்தம் இருந்ததில்லை. பெண்கள் பொது இடங்களில்கூட எந்த வகைத் தடையுமின்றி தாய்ப்பால் ஊட்ட முடியவேண்டும். இதைத்தான் எனது கட்டுரையில் நான் செல்லியிருந்தேன். ஆனால் நான் சொல்ல வந்ததைக்கூடப் படிக்காமல் மக்கள் என்னை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்" எனக் கூறியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close