[X] Close
 

அமைச்சர் முன்னிலையில் தவளைகளுக்கு திருமணம்!


frogs-married-in-madhya-pradesh-to-please-rain-gods-minister-attends

  • பாரதி
  • Posted: 24 Jun, 2018 20:28 pm
  • அ+ அ-

மழை வர வேண்டி கழுதைகளுக்குத் திருமணம், தவளைகளுக்குத் திருமணம் எல்லாம் நம்மூரிலும் நடந்திருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால் மத்தியப் பிரதேசத்தில் அமைச்சர் முன்னிலையில் இப்படி ஒரு திருமணம் நடந்ததுதான்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சர் லலிதா யாதவ் சத்திரப்பூரில் நடந்த இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.
இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அமைச்சர், "பண்டல்கண்ட் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட ஊரில் மழை வேண்டி இந்த சடங்கு நடைபெற்றது" என்றார்.

இதேபோல் ஒரு சடங்கு உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியிலும் நடந்துள்ளது. ஆனால், அங்கு நிஜ தவளைகளுக்குப் பதிலாக பொம்மைத் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  
தட்டில் வைக்கப்பட்ட பிளாஸ்டி தவளை மணமக்களுக்கு பண்டிதர் ஒருவர் சமஸ்கிருதத்தில் வேதம் முழங்க திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்தத் திருமணமும் மழை வேண்டிதான் நடத்திவைக்கப்பட்டது.

இந்திரனின் தயவு வேண்டி இந்தத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாகத் திருமணத்தை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்தனர். "எங்கள் ஊரில் மழை பெய்ய வேண்டும். தவளைகளுக்குத் திருமணம் செய்துவைத்தால் இந்திர தேவன் மகிழ்ச்சியடைவார் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்தத் திருமணத்தை நடத்திவைத்தோம்" என்றனர்.




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close