[X] Close

ஓயாத ராணி பத்மாவதி சர்ச்சை!- பாடப் புத்தகத்திலிருந்து நீக்கம்


rajasthan-textbook-omits-reference-to-khilji-seeing-padmini-in-mirror

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Jun, 2018 12:28 pm
  • அ+ அ-

ராஜஸ்தான் அரசின் மாநில பாடத்திட்ட கழகம், 12-ம் வகுப்பு புத்தகத்தில் ராஜ்புத் ராணி பத்மினியை முஸ்லிம் மன்னர் அலாவுதீன் கில்ஜி கண்ணாடியில் பிம்பமாகப் பார்த்தாரா என்பது தொடர்பான தகவலை நீக்கியுள்ளது. 2018 பதிப்பு வரலாற்றுப் புத்தகத்தில் இந்தத் தகவல் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு பத்மாவத் படத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து பாடப்புத்தக்கத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான 'பத்மாவத்' திரைப்படத்தில், ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கர்னி சேனா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பு வன்முறைப் போராட்டமாக மாறியது. மிகுந்த போராட்டங்களுக்கு இடையே பத்மாவத் திரைப்படம் வெளியானது.

திரைப்பட சர்ச்சை ஓய்ந்தாலும்கூட ராணி பத்மாவதி சர்ச்சை இன்னும் முடியாமல் இருக்கிறது. 
ராஜஸ்தான் அரசின் மாநில பாடத்திட்ட கழகம் 12-ம் வகுப்பு புத்தகத்தில் ராஜ்புத் ராணி பத்மினியை முஸ்லிம் மன்னர் அலாவுதீன் கில்ஜி கண்ணாடியில் பிம்பமாகப் பார்த்தாரா என்பது தொடர்பான தகவலை நீக்கியுள்ளது. 

முன்னதாக 2017-ல் பதிப்பிக்கப்பட்ட 12-ம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில், (Prakar aur Prabhav- Mughal invasion: Type and effects) முகாலய படையெடுப்பும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பில் இருந்த பாடத்தில் ராணி பத்மினியின் கதை என்று ஒரு பகுதி இருந்தது.

அதில், "சித்தூர் கோட்டையை 8 ஆண்டுகள் முற்றுகையிட்டும்கூட சுல்தானால் சித்தூர் அரசனை வெல்ல முடியவில்லை. அப்போது சுல்தான் ரானா ரத்தன் சிங்கிடம் ஒரே ஒரு முறை ராணி பத்மினியின் பிம்பத்தை கண்ணாடியில் பார்க்க அனுமதித்தால் தான் மீண்டும் டெல்லிக்கே சென்றுவிடுவதாகக் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை ரானா ஏற்றுக்கொண்டார். அலாவுதீன் ராணி பத்மினியின் பிம்பத்தைப் பார்த்துவிட்டு திரும்பும்போது ரானா ரத்தன் சிங்கை சிறை பிடித்தார். ரானாவை விடுதலை செய்ய வேண்டுமானால் ராணி பத்மினியை தன்னுடன் அனுப்ப வேண்டும் என நிபந்தனை விதித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 2018 பதிப்பில் இந்த விவரம் நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக "8 ஆண்டுகளுக்குப் பின்னரும் சித்தூரைக் கைப்பற்ற முடியாத சுல்தான் அலாவுதீன் கில்ஜி சமாதானப் பேச்சு என்ற போர்வையில் ரானா ரத்தன் சிங்கை கைது செய்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் ராணி பத்மினியின் கதை 1540-ல் மாலிக் முகமது ஜெயாசி எழுதிய பத்மாவத் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்ற குறிப்பும் பாடப்புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close